Tuesday, December 11, 2012

ரஜினி spl .... ரசிகர்களுக்கு மட்டும்

உலகம் போற்றுதே உன்ன, 
ஜாதி மத பேதம் இல்லாம 
உலகம் போற்றுதே உன்ன, 
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனசுல இடம் பிடிக்க 
என்ன விந்தை செய்தாயோ?

நீ நடந்தா அதிருது, 
நீ கை அசைச்சா அலறுது ,
கோடான கோடி கண்கள் உன் 
பார்வை பட காத்து கிடக்கே
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனசுல இடம் பிடிக்க 
என்ன விந்தை செய்தாயோ?

பிறந்தோம் வளர்ந்தோம் செத்தோம்னு 
இல்லாம, தலைவா நீ,
வரலாறா உருவெடுத்து நிக்கியே 
இன்னும் பல வருஷம் உன் பேர 
நிலைநாட்ட பல உயிர்கள் காத்துகிடக்கே 
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனசுல இடம் பிடிக்க 
என்ன விந்தை செய்தாயோ?

பெத்தவன் பேச்சை கேட்காத ஒரு கூட்டம் 
உன் பேச்சை கேட்டு பின்னால வருதே 
குழந்தைக்கு பால் வாங்க காசு இல்லாதவன் கூட 
உனக்கு பால் அபிஷேகம் பண்ண மறக்கலையே 
தன்னை பெத்ததுக்கும் தான் பெத்ததுகும் 
மேல உன்னை வச்சிருக்க 
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனச ஆள எங்க படிச்சாயோ?

எட்டு எட்டா வாழ்கைய பிரிச்சி காட்டி 
பகுதறிவ ஊட்டின, இன்னும் பல படங்கள்ள 
பல நல்ல கருத்தகள வாரி வழங்குன ,
மேலும் மேலும் மக்களுக்கு நல்லது செய்யும்மய்யா 
உன் அனுபவத்துல மேலும் ஒரு வருஷம் கூடுதய்யா 
இந்த பிறந்த  நாளாள உன் அனுபவத்துல 
மேலும் ஒரு வருஷம் கூடுதய்யா
என்ன விந்தை செய்தாயோ?
நீ மார்த்தாண்டனா வாழ ஆசை படுற மக்கள் 
மனுஷ பயலுக கிடைக்க 
என்ன தவம் செய்தாயோ?

Saturday, November 17, 2012

அவள்...


நீண்ட நாட்களுக்கு முன்பு நான் கிறுக்கிய வரிகள் 

ரவு நேர குளிர் காற்று அவள்
மழையில் நனைந்த பூ மொட்டு அவள்
கோடையில் தோன்றிய கரு மேகம் அவள்
இமய மலையின் பணி பரப்பு அவள்
என் வாழ்வின் இனிய இசை அவள்
இசையின் ஏழு சுவரங்களும் அவள்
அழகின் அதிசியம் அவள்
பிரஹ்மனின் தவமும் அவள்

காதலின் அகராதி அவள்
அழகின் இருப்பிடம் அவள்
வெற்றியின் புகழிடம் அவள்
பாசத்தின் பிறப்பிடமும் அவள்
கவலைகளின் கல்லறை அவள்
மகிழ்ச்சியின் வழிகாட்டி அவள்

குழந்தையின் மழழை அவள்
தாயின் ஆரவணைப்பு அவள்
நட்பின் தோழமை அவள்
தந்தையின் கண்டிப்பு அவள்
துணைவியின் பாசம் அவள்
இறைவனின் கருணை அவள்

மாலை நேர சூரியன் அவள்
மார்கழி மாத பனித்துளி அவள்
கோடை கால மழை துளி அவள்
பௌர்ணமி நேர நிலவு அவள்
அறிவி ஓர சாரல் அவள்
கடல் அலைகளின் தாளம் அவள்
நீரோடையின் தெளிவு அவள்

மலர்களின் வாசம் அவள்
வண்டுகளின் நேசம் அவள்
தேன் துளியின் ருசி அவள்
மலை பிரதேஷத்தின் பசுமை அவள்
பட்டு பூச்சியின் மென்மை அவள்
வண்ணத்து பூச்சியின் வண்ணம் அவள்
பூமி தாயின் பொறுமை அவள்

என் கோவம் அவள்
என் சிரிப்பு அவள்
என் சுவாசம் அவள்
என் நேசம் அவள்
என் இதய துடிப்பு அவள்
என் அணுவும் அவள்
என் உயிரும் அவள்
எனது காதல் அவள்



Sunday, August 5, 2012

வாழ்நாள் உறவுகள்


புழுதி சாலைகளில் ஒன்றாய் சுற்றிய நாட்கள்,
பாதி  கட்டிய வீடுகளில் நிகழ்த்திய கண்ணாமூச்சி
ரோடோர  நாய்  குட்டிகளுக்கு  அடைக்கலம், 
ஒன்று  இரண்டு  ரூபாய்  வைத்து  விளையாடிய 
புதர்  அடர்ந்த  மைதான  cricket,
உச்சி  வெயிலினில் மிதி வண்டி பயணம் ,
சின்ன சின்னதாய் செய்த பொருட்காட்சி திருட்டு,
வார  இறுதி  business விளையாட்டுகளும், போட்டி  போட்டு 
விளையாடிய  video game bike raceகள் ,
கல்லூரி  நாட்களில்  செய்த  mass bunk ஐடியாகள் 
குட்டி சுவற்றினில் அமர்ந்து நிகழ்த்திய  
சைட்  அரங்கேற்றங்கள், கவலைகள் ஏதுமின்றி  
சுற்றி திரிந்த மாணவ பருவமும், இறுதி  
வரை ஒன்றாய் வருவதற்காக தேடி கொண்ட  
உறவுகளுமான  நண்பர்கள் .., 
தொழில்நுட்ப  வளர்ச்சி  இல்லாமல்  அன்று  
கழித்த  நாட்களின்  அற்புத  உணர்வு , இன்று  A.C அறைகளிலும் 
Facebook இலும்  , எபோதாவது நிகழும் அலைபேசி உரையாடல்களிலும் 
கிடைபதில்லை ... 

வாழ்நாள் உறவுகளான நண்பர்களே ,
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...





கோபம்


கருமேகங்கள்  சூழ்ந்த  இதமான  வானிலையில் 
திடிரென வந்து  செலும்  இடியினை  போல்
உன் நட்பு எனும் கரு மேகத்தினில், திடீர் 
இடியாய் வந்து செலும் உன் கோபம், சிறிதாய் 
வலி தந்தாலும், உன் கோபத்திற்கு பின் நீ பேசும் 
அந்த முதல் வார்த்தை முதல் துளி  
மழையினை போல் சுகம் தானடி
என் கார்மேக தேவதையே...

Thursday, June 7, 2012

பெண்..


பலரின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் மாற
சிலரின் முகங்களில் சிறு புன்னகை பூக்க 
ஆரம்பமே அழிவினில் முடிந்த என்னை போன்ற சிலரின்  
மத்தியில், விதியினை வென்று 
இவ்வுலகினில் ஜீவித்தேன் நான்

சில வருடங்கள் மகிழ்ச்சியாய் சுற்றி திரிந்த 
என் வாழ்வினில் வந்தது அந்த மாற்றம், 
அன்று என்னுள் ஏற்பட்ட அந்த வலி என் வாழ்வினை
நான்கு சுவற்றினுள் அடைக்கும் என்று நான் அறியேன் 

அன்று வரை சுதந்திரமாய் சுற்றி திரிந்த கால்களுக்கு 
சில உடைகளை கூடுதலாய் கொடுத்து விளங்கிட்டனர் 
ஒன்றாய் அடித்து பிடித்து விளையாடிய நண்பர்களை  
தூரமாய் நின்று பார்ப்பதற்கு கூட தடை. 
ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு, 
அதலாம் அப்படிதான், இனிமேல் வீட்டுக்குளேயே விளையாடு 
என்பதே பதிலாய் வந்தது 
தனியாய் சென்ற பள்ளிக்கு அன்று முதல்
ஓர் துணை, எதற்கு என்று தெரியாமலே பின் தொடர்ந்தது

என் உடலில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் 
பல கழுகு கண்களுக்கு இரை ஆனேன். 
முகம் பார்த்து பேசுபவர்களை விட ,
மார் பார்த்து பேசுபவர்கள் அதிகரித்தனர்
என் பழக்க வழக்கங்கள் கூட என் 
உடல் அமைப்பை வைத்தே அனுமானிக்க பட்டது 

கல்லூரியை அடைந்த போது கையினில் 
ரோஜா மலரோட வேட்டை ஆட தயாராய் 
சில ஓநாய்கள், மனதினில் சிறை பிடிக்கும் 
முயற்சியில் சில ரோமியோக்கள்.
பேசாவிட்டால் திமிரு 
பேசினால் வேசி, தரம் கெட்டவள்
போன்ற பல அவ பெயர்களோட கல்லூரியை
முடித்த உடன், அதுவரை பார்த்த 
நான்கு சுவர்களை தவிர்த்து, வேறு 
நான்கு சுவர்களின் வண்ணம் அறிய 
பெற்றோரின் அடுத்த கட்ட முயற்சி.

கடுமையாய் உழைத்து ஓர் வேலையினில் சேர்ந்தால் 
குனிந்து குனிந்தே வேலை நியமனம் பெற்றாள் 
என்ற புற முதுகு வசனங்களை தவிர்த்து, 
முன்னேற வேண்டும் எனும் முனைப்போடு உழைத்து 
பதவி உயர்வு பெற்றால், மீண்டும் புற முதுகர்களின் 
வாயினில் நான் அவல். 
வீட்டினை விட்டு வெளியேறியது முதல் 
வீட்டினுள் நுழையும் வரை பல கழுகு பார்வைகள்,
உடம்பினில் பல பூரான்கள், காதினுள் பல நாராசங்கள்.

ஓர் வயதினை எட்டிய உடன் எவனோ ஒருவனின் 
கைகளில் என் கைகள் திணிக்க பட்டன 
அன்று முதல் அவனுக்கு நான் அடிமை 
அவன் விருப்பு வெறுப்புகள் உணர்ந்து 
நேரத்திற்கு உணவிட்டு, உணவாகி 
உயிர் விட்டு, உயிர் கொடுத்து 
அவனின் வசைகளுக்கும், முரட்டு தனத்திற்கும் 
பொறுமை காத்து, நான் கொடுத்த உயிரினை 
முன்னேற்றுவதில் மட்டுமே எனது கவனம்.  

நான்கு சுவற்றினில் 15 வயதினில் அடைபட்ட நான்
நான்கு கால்களில் போகும் வரை 
நான்கு சுவற்றுகுள்ளே வாழ்ந்து 
பல வசைகளுக்கும், கழுகு பார்வைகளுக்கும் 
இரை ஆகும் நான் 
முண்டாசு கவிஞன் கூற்றின் படி
மா தவம் செய்து பிறந்திட்ட பெண். 

Thursday, May 31, 2012

முத்தம்

நான்கு இதழ்களின் சங்கமம்,
சுவை உணரும் நாவிற்கு
நாவின் சுவை அறிய ஓர் வாய்ப்பு.
அசுத்தமாய் கருதப்படும் உமிழ் நீர்
அமுதமாய் மாறும் நிமிடம்.,
இரு உடல் ஓர் உயிராய்
சங்கமிக்க நிகழும் முயற்சி,
மனதால் இணைந்தவர்கள் உடலால்
இணைய முனையும் நுழைவு வாயில்,
பல வருட உறவுக்கு
சில நிமிடஇணைதலால்
கொடுக்கப்படும் ஒப்(இதழ்) வாக்குமூலம்...

Thursday, May 17, 2012

மனமே



குழப்பங்கள் நிறைந்த மனமே 
கலங்காதே!! 
தோல்விகள் நினைத்து கலக்கமா?
இத் தோல்வி கள் நிறந்தரம் அல்ல. 
உறவுகள் நினைத்து கலக்கமா ?
உறவுகள் ரயில் சிநேகங்கலே .
நிரந்தரம் இல்லா உலகினில் 
நிரந்தரம் இல்லா உயிரினை பெற்று 
நிரந்தரம் இல்லா ஏமாற்றங்களை நினைத்து 
கலங்குவது ஏனோ?
தோல்விகள் கண்டு அஞ்சாதே 
தோற்றது நீ அல்ல உனது முயற்சிகள் 
தோல்விகளில் பாடம் பயில கள்
வெற்றிகள் உன் வாசலில் 
இடையில் தோன்றிய உறவுகள் 
இடையினில் செல்வதில் ஆச்சர்யம் இல்லை 
உறவுகளின் அழகு எதிர்பார்ப்பின்மையில் 
கடல் தாண்டும் பறவை போல் 
இளைபாறாமல் பயணி 
காட்டில் வளரும் மரத்தினை போல் 
உனக்கான நீரினை நீயே தேடு 
பாசத்திற்கு கட்டு படு 
அடிமை ஆகி விடாதே 
உணர்வுகளுக்கு மதிப்பு கொடு 
உன்னை ஆழ விடாதே 
நண்பர்களை பெருக்கி கொள் 
எதிரிகளை அல்ல,
மன்னிப்பு கேட்க யோசிக்காதே 
அனைவரும் ஆதாமின் வாரிசுகளே 
சுடு சொற்களை தவிர் 
புன்னகையை பரிசலி 
தவறுகளை மன்னித்து பழகு 
தவறுகள் அறியாமையின் பின் விழைவு 
பொறுமையாக இருக்க பழகு 
பொறுமை இன்மை உனது பலவீனம் 
இந் நிமிடம் உன்னுடையது 
நாளைய கவலை இனி வேண்டாம் 

Sunday, May 13, 2012

22 - 26 வயதினில் இளைஞனின் வாழ்கை


வாழ்கை என்னும் போராட்த்தின் நுழைவு வாயில் 
குடும்ப சுமைகள i சுமக்க ஒத்திகை
பெண்களின் திருமண சந்தை அணிவகுப்பு
ஆண்களின் வேலை தேடல் படலம்
புரிந்தும் புரியா காலகட்டம் 

காதலின் ஆயுட் காலம் நிர்னையுப்பு,
உண்மை காதல்கள் பொய்யாகும்
பெற்றோர் கண்ணீரில் காதல் கரையும்,
இறுதியாய் காதலியின் திருமணத்தில்
காதலனின் வரவேற்பு .

பதவி உயர்வுக்காக போராட்டம்
corporate   வாழ்கையின் சூத்திரம் அறியா திண்டாட்டம்
என்னவென்று
தெரியா ஒரு யோசனை
இரவு முழுதும் யோசித்தும்
தூக்கம் கெடுவதே மிச்சம்.
சாதிக்க வேண்டும் என்று மனம் ஏங்கும்,
சாதனை என்றால் என்ன என்று 
புத்தி குழம்பி போகும  

உடம்பை வருத்தி பல மணி நேர வேலை
உறவுகளின் முகவரி மறக்கும் நீண்ட இடைவேளை
இறுதி வரை
ஒன்றாய் இருப்போம் என்ற 
கல்லூரி இறுதி நாள் உறுதி மொழி
எப்போதாவது நினைவினில் வந்து போகும
உடன் படித்தவர்கள் அயல் நாடுகளில் பணி புரிய
MBA MS கனவுகள் உயிர் பெற துடிக்கும் 

5 இலக்க ஊதியம் 5 தினகளின் 3 இலக்கத்தை எட்டி பிடிக்கும்
கல்லூரி நாட்களின் கனவான cafe day coffee இன்றும் கனவாகவே
பிறந்த நாள் அன்று குறைந்த விலை ஆடை குடுத்த
அப்பாவின் மேல் இருந்த பருவ வயது கோபம்
தற்பொழுது மரியாதையாக உருவெடுக்கும் அதிசியம்
படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லா பணி புரிவோர்களின்
மனதினில் 'அப்பவே புரிஞ்சி படி
ச்சிருகலமோ! என்ற
எண்ணம் , கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 

முதல் காதல் தோற்ற்ற பொழுது எடுத்த
'வாழ்வில் பெண்களுக்கு இடம் இல்லை 'உறுதிமொழி
சிறிது சிறிதாய் மங்கி போகும்,
வேறு பெண்ணின் பின்னால் மனம் செல்ல ஏங்கும் போது
அப் பெண்ணிற்கு காதலன் இருக்கிறான் என்ற தகவல்
மீண்டும் பெண்கள் வேண்டாம் உறுதி மொழி எடுக்க தூண்டும்

பதினெட்டு மணி நேரங்கள் ஓயாமல் உழைத்து
சில பல manager காலில் விழுந்து பதவி உயர்வு பெற்று
5 இலக்க ஊதியத்தை 6 இலக்க ஊதியமாய் மாற்றி அமைத்து
வகை வகையாய் புகைப்படம் எடுத்து
பல matrimony  தளங்களில் பதிவு செய்து 
பல போரட்டங்களுக்கு பிறகு ஒரு பெண்ணை திருமணம் செய்து
முதல் இரவு அறையில்
'இவள் வேற  யாராவது லவ் பணி இருப்பாளோ?'
என்ற கேள்வியுடனே வேறு ஒரு வாழ்கை துவங்கும் 


நிம்மதி


  
இவ் வார்த்தையின் அர்த்தம் என்ன?
நினைப்பது எல்லாம் கிடைத்தால் மனிதன் நிம்மதி அடைகிறானா?
எதிர்பார்ப்பது கிடைத்த பின்னால் மீண்டும் புதிதாய் எதிர்பார்க்கிறான் 
நினைப்பது கிடைப்பதனால் வரும் நிம்மதி 
அடுத்த எதிர்பார்ப்பு பிறக்கும் வரை மட்டுமே 

நிலையான நிம்மதி இவ் உலகில் உண்டோ?
மனித வர்க்கம் சுயநலம் கொண்டது ,
பொது நலத்தை விரும்புவோர் கூட 
ஒரு வகையில் சுயநலவாதிகளே.

சிலரின் கண்ணீரில் பலரின் நிம்மதி ஒழிந்துள்ளது
கண்ணீருக்காக வருந்துவதா?
இல்லை பிறரின் நிம்மதிக்காக கண்ணீரின் சுவை காண்பதா?
முடிவு அவர் அவர் கைகளில். 

எவரையும் காயப்படுத்தா நிம்மதி இவ் உலகினில் இல்லை .
அடுத்த எதிர்பார்ப்பு பிறக்கும் வரை ,
நிம்மதியாய் வாழ்வோம் அல்லது, 
புதிதாய் ஒரு எதிர்பார்ப்பினை மற்றவருக்குள் 
உருவாக்க நம் நிம்மதியை துளைத்து 
நிம்மதி அடைவோம்.  


மென்பொருள் நிறுவனத்தில் ஒரு வருடம் !!!




மென்பொருள் நிறுவனத்தில் நுழைந்து சுமார் ஓர் ஆண்டு கடந்த நிலையில், இந்த மென்பொருள் துறை கொடுத்தது என்ன, பெற்றது என்ன என்று சிறு யோசனை தோன்றியது.

இன்று கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் மனதிலும், அவர்களின் பெற்றோர்ககளின் மனதிலும் ஏறக்குறைய ஒரே எண்ணம் தான் இருக்கும். "நாம் / நமது பிள்ளை எப்படியாவது ஒரு முன்னணி பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேளையில் சேர்ந்து விட வேண்டும் என்பதே அது. ஏன் இந்த ஆசை? மென்பொருள் நிறுவணத்தை நோக்கி அனைவரும் படை எடுக்க காரணம் என்ன? இதற்கு ஒரே பதில் பணம்........

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா? அதற்கு பணம் வேண்டும்.... பணம் வேண்டுமா? கணினி துறையில் ஒரு வேலை தேடு.. இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரம்.

அறிவை வளர்த்துக்கொள்ள கல்வி என்ற நிலை மாறி, பணத்தை பெருக்கி கொள்ள கல்வி என்ற நிலை என்று உருவானதோ அன்றே சேவை துரையாக இருந்த கல்வி துறை வியாபாரமாக மாறிவிட்டது என்றால் அது மிகை ஆகாது. இன்று எத்தனை பேர் படித்த படிப்பிற்கு வேலை செய்கிறார்கள்? படிப்பது ஒன்றுமாய், வேலை செய்வது ஒன்றுமாய் இருக்கிறது
கல்லூரி இறுதி ஆண்டில் மாணவர்கள் மேல் பெற்றோர்களும், சமூகமும் ஒரு அழுததத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. கல்லூரியை முடித்து வெளியே வரும் போது கையில் ஒரு வேலையுடன் வர வேண்டும் என்பது ஒரு எழுத படாத விதி ஆகிவிட்டது. அது முடியாமல் போனால் அந்த மாணவனுக்கு அறிவு இல்லை, திறமை இல்லை என்று ஏளனம் செய்பவர்கள் அதிகம், இந்த ஏளன சொல்லை கேட்க விருப்பம் இல்லாமலே பல மாணவர்கள் தங்கள் கனவுகளை துளைத்து மென்பொருள் நிறுவனத்தில் நுழைகிறார்கள் என்று சொல்லலாம்.

இன்று மென்பொருள் நிறுவனத்தில் வேலை செயும் 60%  இளைஞர்கள் மென்பொருள் படிப்பை பட்டப் / பட்டயப் படிப்பை படித்தவர்கள் அல்ல. mechanical, civil, electrical, electronics, chemaical, bio technology போன்ற மென்பொருள் சாரா துறை சேர்ந்தவர்கலே. இவர்கள் அனைவரும் விருபதோடு பணிபுரிகிறார்களா என்றாள் இல்லை என்பதே பதில். ஏதேனும் ஒரு வேலை வேண்டும், ஊரார் வாயை அடைக்க வேண்டும் என்ற காட்டாயத்தால் மட்டுமே கணினி துறைக்குள் வந்தவர்கள் இவர்கள்.

மென்பொருள் துறை மற்ற துறை மாணவர்களை தேர்வு செய்வதற்கு காரணம் என்ன? இதற்கு பின் இருக்கும் சூட்சமத்தை நாம் யாரும் யோசிப்பதெய் இல்லை. இக்கேள்விக்கு மென்பொருள் துறை பெரியவர்கள் சொல்லும் காரணம் "நாங்கள் அனைத்து துறை சார்ந்த மென்பொருளும் தயார் செய்கிறோம், அதனால் எங்களுக்கு அந்த துறை சார்ந்த அறிவு தேவை படுகிறது என்பதாகும்" ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஒரெய் நிறுவனத்தில் நிரந்தரமாக பணிபுரிய மாட்டார்கள், இதற்கு காரணம் வேலை பலு. இதனை கட்டுப்படுத்த மென்பொருள் நிறுவனம் தேர்ந்தெடுத்த வழி வேறு துறை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏதேனும் ஒரு கணினி தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுத்து, சுமார் ஒரு வருடம் வேலை செய்ய வைப்பது. இப்படி செய்வதன் மூலம் அவனுக்கு தான் படித்தது அனைத்தும் மறப்பது மட்டும் அல்லாமல் வேறு நிறுவனத்திற்கு மறுவதற்கும் தேறியம் வராது. ஓரே ஒரு தொழில்நுட்பத்தை மட்டும் வைத்து கணினி துறையில் சமாளிப்பது கஸ்டம் என்பதால் அவன் மற்றொரு நிறுவணத்தை நோட்கி அவளவு சுலபமாக செல்ல மாட்டான்.

சரி அப்படி என்னதான் நடக்குது இந்த கணினி துறையில்? என்று கேட்பது புரிகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் "கொத்தடிமை தனம்."
மனித உரிமை சட்டத்தின் படி, ஒரு மனிதனிடம் ஒரு நாளுக்கு சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க கூடாது, இதனை மீறினால் சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இன்று ஒரு மென்பொருள் நிறுவன வூழியன் சராசரியாக ஒரு நாளுக்கு பனிரெண்டு மணி நேரம் பணி புரிகிறான், சில நேரங்களில் இருபத்தி நான்கு மணி நேர தொடர் வேலையும் செய்ய நேரிடும். இதற்கு அதிக வூதியம் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே பதில்.

தினம் தினம் இப்படி வேலை செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் மிக மோசமானது. தூட்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, முடி உதிர்தல் இவை தவிர உறவுகளுடன் அவன் செலவிடும் நேரமும் மிக குறைவாகி போகிறது. இதன் விளைவு நாற்பதுகளில் எத்தி பார்க்கும் வியாதிகள் அனைத்தும் நுட்பதிகளிலே வந்து விடுகிறது.. மென்பொருள் நிறுவனம் அதிக வூதியம் கொடுப்பது அவன் பார்க்கும் வேலைக்கு மட்டும் அல்ல அவன் பெரும் வியாதிகளுக்கும் சேர்த்தே.

அதிக வூதியம் கிடைக்கிறதே தவிர அதனை செலவு செய்ய சிறிதும் நேரம் கிடைப்பது இல்லை என்பதெய் உண்மை. பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று வாய்மொழியாக சொன்னாலும், இன்று பணத்தை நோட்கி செல்பவர்களே அதிகம். தன் அனைத்து சந்தோசங்கலையும் இழந்து வெறும் பணத்தை மட்டும் வைத்து என்ன செய்வது??

மனைவியுடன் சிறிது நேரம் செலவு செய்ய முடியாமல், பெற்றோறுடன் சிறிது நேரம் பேச நேரம் இல்லாமல், குழைந்தகளுடன் சிறிது நேரும் விளையாட நேரம் இல்லாமல், நண்பர்களுடன் அரட்டை அடிக்க நேரம் இல்லாமல் வெறும் பணத்தை மட்டும் வங்கி கணக்கில் சேர்த்து கொண்டே போய் என்ன செய்வது?

பெற்றோர்களே!!!! உங்கள் மகன் / மகளின் வாழ்வில் வெறும் பணம் மட்டும் வேண்டுமா? கணினி துறை நல்ல தேர்வு. நிம்மதி வேண்டுமா? மணிக்கவும், கணினி துறையில் அதற்கு இடம் இல்லை.

அனைத்து துறைகளிலும் வேலை பழு உண்டு, பனிரெண்டு மணி நேர வேலையும் உண்டு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, ஆனால் அந்த வேலை பழு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும், அல்லது குறைந்த பட்சம் உங்கள் மனம் வேலையை விட்டு வீட்டிற்கு வந்ததும் அதனை மறந்து விடும், ஆனால் கணினி துறை உங்களை எப்பொழுதும் சுற்றி கொண்டே இருக்கும். பதவி உயர்வு கிடைக்க கிடைக்க வேலைகளும் அதிகரிக்கும் ஒரே துறை கணினி துறையாகதான் இருக்கும்.

 கணினி துறையில் மாற்றம் கண்டிப்பாக தேவை, கொத்தடிமை தனத்திற்கு ஒரு முடிவு  வேண்டும்.

"கை நிறைய பணம், உடல் நிறைய வியாதி, மன அழுத்தம் வேண்டுமா? கணினி துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது."

புகற்சி - (காதல்)


புகற்சி - (காதல்)
சுயநல முடிவு
உணர்வு பகிர்தல்
ஊடலின் அனல்
கூடலின் இனிமை
இதயத்தில் பட்டாம்பூச்சி
குழப்பத்தின் துவக்கம்
காமத்தின் ஆரம்பம்
பெற்றோரின் எதிரி
ஜாதிகளின் எமன்
நாகரிக அடையாளம் 
மகிழ்ச்சியின் காரணம் 
துக்கத்தின் அடித்தளம்
உண்மையின்  தேடல்
பாசத்தின் ஊற்று
தாயின் அன்பு
மனிதனின் பலவீனம்
இதயத்தின் வலி
நட்பின் அடுத்தகட்டம்
தோழ்வியே முடிவாய்

சிலருக்கு ஒரு முறை
பலருக்கு பல முறை