மென்பொருள் நிறுவனத்தில் நுழைந்து சுமார் ஓர் ஆண்டு கடந்த நிலையில், இந்த மென்பொருள் துறை கொடுத்தது என்ன, பெற்றது என்ன என்று சிறு யோசனை தோன்றியது.
இன்று கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் மனதிலும், அவர்களின் பெற்றோர்ககளின் மனதிலும் ஏறக்குறைய ஒரே எண்ணம் தான் இருக்கும். "நாம் / நமது பிள்ளை எப்படியாவது ஒரு முன்னணி பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேளையில் சேர்ந்து விட வேண்டும் என்பதே அது. ஏன் இந்த ஆசை? மென்பொருள் நிறுவணத்தை நோக்கி அனைவரும் படை எடுக்க காரணம் என்ன? இதற்கு ஒரே பதில் பணம்........
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா? அதற்கு பணம் வேண்டும்.... பணம் வேண்டுமா? கணினி துறையில் ஒரு வேலை தேடு.. இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரம்.
அறிவை வளர்த்துக்கொள்ள கல்வி என்ற நிலை மாறி, பணத்தை பெருக்கி கொள்ள கல்வி என்ற நிலை என்று உருவானதோ அன்றே சேவை துரையாக இருந்த கல்வி துறை வியாபாரமாக மாறிவிட்டது என்றால் அது மிகை ஆகாது. இன்று எத்தனை பேர் படித்த படிப்பிற்கு வேலை செய்கிறார்கள்? படிப்பது ஒன்றுமாய், வேலை செய்வது ஒன்றுமாய் இருக்கிறது
கல்லூரி இறுதி ஆண்டில் மாணவர்கள் மேல் பெற்றோர்களும், சமூகமும் ஒரு அழுததத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. கல்லூரியை முடித்து வெளியே வரும் போது கையில் ஒரு வேலையுடன் வர வேண்டும் என்பது ஒரு எழுத படாத விதி ஆகிவிட்டது. அது முடியாமல் போனால் அந்த மாணவனுக்கு அறிவு இல்லை, திறமை இல்லை என்று ஏளனம் செய்பவர்கள் அதிகம், இந்த ஏளன சொல்லை கேட்க விருப்பம் இல்லாமலே பல மாணவர்கள் தங்கள் கனவுகளை துளைத்து மென்பொருள் நிறுவனத்தில் நுழைகிறார்கள் என்று சொல்லலாம்.
இன்று மென்பொருள் நிறுவனத்தில் வேலை செயும் 60% இளைஞர்கள் மென்பொருள் படிப்பை பட்டப் / பட்டயப் படிப்பை படித்தவர்கள் அல்ல. mechanical, civil, electrical, electronics, chemaical, bio technology போன்ற மென்பொருள் சாரா துறை சேர்ந்தவர்கலே. இவர்கள் அனைவரும் விருபதோடு பணிபுரிகிறார்களா என்றாள் இல்லை என்பதே பதில். ஏதேனும் ஒரு வேலை வேண்டும், ஊரார் வாயை அடைக்க வேண்டும் என்ற காட்டாயத்தால் மட்டுமே கணினி துறைக்குள் வந்தவர்கள் இவர்கள்.
மென்பொருள் துறை மற்ற துறை மாணவர்களை தேர்வு செய்வதற்கு காரணம் என்ன? இதற்கு பின் இருக்கும் சூட்சமத்தை நாம் யாரும் யோசிப்பதெய் இல்லை. இக்கேள்விக்கு மென்பொருள் துறை பெரியவர்கள் சொல்லும் காரணம் "நாங்கள் அனைத்து துறை சார்ந்த மென்பொருளும் தயார் செய்கிறோம், அதனால் எங்களுக்கு அந்த துறை சார்ந்த அறிவு தேவை படுகிறது என்பதாகும்" ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஒரெய் நிறுவனத்தில் நிரந்தரமாக பணிபுரிய மாட்டார்கள், இதற்கு காரணம் வேலை பலு. இதனை கட்டுப்படுத்த மென்பொருள் நிறுவனம் தேர்ந்தெடுத்த வழி வேறு துறை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏதேனும் ஒரு கணினி தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுத்து, சுமார் ஒரு வருடம் வேலை செய்ய வைப்பது. இப்படி செய்வதன் மூலம் அவனுக்கு தான் படித்தது அனைத்தும் மறப்பது மட்டும் அல்லாமல் வேறு நிறுவனத்திற்கு மறுவதற்கும் தேறியம் வராது. ஓரே ஒரு தொழில்நுட்பத்தை மட்டும் வைத்து கணினி துறையில் சமாளிப்பது கஸ்டம் என்பதால் அவன் மற்றொரு நிறுவணத்தை நோட்கி அவளவு சுலபமாக செல்ல மாட்டான்.
சரி அப்படி என்னதான் நடக்குது இந்த கணினி துறையில்? என்று கேட்பது புரிகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் "கொத்தடிமை தனம்."
மனித உரிமை சட்டத்தின் படி, ஒரு மனிதனிடம் ஒரு நாளுக்கு சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க கூடாது, இதனை மீறினால் சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இன்று ஒரு மென்பொருள் நிறுவன வூழியன் சராசரியாக ஒரு நாளுக்கு பனிரெண்டு மணி நேரம் பணி புரிகிறான், சில நேரங்களில் இருபத்தி நான்கு மணி நேர தொடர் வேலையும் செய்ய நேரிடும். இதற்கு அதிக வூதியம் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே பதில்.
தினம் தினம் இப்படி வேலை செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் மிக மோசமானது. தூட்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, முடி உதிர்தல் இவை தவிர உறவுகளுடன் அவன் செலவிடும் நேரமும் மிக குறைவாகி போகிறது. இதன் விளைவு நாற்பதுகளில் எத்தி பார்க்கும் வியாதிகள் அனைத்தும் நுட்பதிகளிலே வந்து விடுகிறது.. மென்பொருள் நிறுவனம் அதிக வூதியம் கொடுப்பது அவன் பார்க்கும் வேலைக்கு மட்டும் அல்ல அவன் பெரும் வியாதிகளுக்கும் சேர்த்தே.
அதிக வூதியம் கிடைக்கிறதே தவிர அதனை செலவு செய்ய சிறிதும் நேரம் கிடைப்பது இல்லை என்பதெய் உண்மை. பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று வாய்மொழியாக சொன்னாலும், இன்று பணத்தை நோட்கி செல்பவர்களே அதிகம். தன் அனைத்து சந்தோசங்கலையும் இழந்து வெறும் பணத்தை மட்டும் வைத்து என்ன செய்வது??
மனைவியுடன் சிறிது நேரம் செலவு செய்ய முடியாமல், பெற்றோறுடன் சிறிது நேரம் பேச நேரம் இல்லாமல், குழைந்தகளுடன் சிறிது நேரும் விளையாட நேரம் இல்லாமல், நண்பர்களுடன் அரட்டை அடிக்க நேரம் இல்லாமல் வெறும் பணத்தை மட்டும் வங்கி கணக்கில் சேர்த்து கொண்டே போய் என்ன செய்வது?
பெற்றோர்களே!!!! உங்கள் மகன் / மகளின் வாழ்வில் வெறும் பணம் மட்டும் வேண்டுமா? கணினி துறை நல்ல தேர்வு. நிம்மதி வேண்டுமா? மணிக்கவும், கணினி துறையில் அதற்கு இடம் இல்லை.
அனைத்து துறைகளிலும் வேலை பழு உண்டு, பனிரெண்டு மணி நேர வேலையும் உண்டு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, ஆனால் அந்த வேலை பழு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும், அல்லது குறைந்த பட்சம் உங்கள் மனம் வேலையை விட்டு வீட்டிற்கு வந்ததும் அதனை மறந்து விடும், ஆனால் கணினி துறை உங்களை எப்பொழுதும் சுற்றி கொண்டே இருக்கும். பதவி உயர்வு கிடைக்க கிடைக்க வேலைகளும் அதிகரிக்கும் ஒரே துறை கணினி துறையாகதான் இருக்கும்.
கணினி துறையில் மாற்றம் கண்டிப்பாக தேவை, கொத்தடிமை தனத்திற்கு ஒரு முடிவு வேண்டும்.
"கை நிறைய பணம், உடல் நிறைய வியாதி, மன அழுத்தம் வேண்டுமா? கணினி துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது."