Monday, August 31, 2015

ஜோசிய கிளி...



அடுக்கி வைக்கப்பட்ட பத்து அட்டைகளுள்
உரிமையாளர் விருப்பப்படி ஒன்றை
எடுத்து கொடுத்து கம்பிகளுக்கு பின்னால்
அமைதியாய் செல்லும் ஜோசிய கிளியாய்
வாழ்கை துணையை பத்து  புகைபடங்களுள்
சில மணி நேர உரையாடல்களில் தேர்ந்தெடுத்து
திருமண கூண்டிருக்கு பின்னால் உலகை
கண்டு பெரு மூச்சோடு மற்றும் ஒரு
ஜோசிய கிளியை உருவாக்கி கொண்டிருப்போம் 

Thursday, July 23, 2015

நிலவு


குளிர் காற்று,
இனிய இசை,
தண்ணீர் சலசலப்பு,
அமைதியான இரவு,
நட்சத்திரங்கள் மினுமினுக்க,
அவள் உறங்கினாள்,
நிலவு மறைந்தது.

Wednesday, February 13, 2013

காதலர் தின வாழ்த்துக்கள்!!











ஏன், எதற்கு, எப்போது, எதனால், எப்படி 
போன்ற கேள்விகளுக்கு பதில் கூறாமல் 
உள் நுழைந்த தீவிரவாதி. 

ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளுக்கு 
மதிப்புக்  கொடுக்கா துரோகி, 

கண் திறந்து கனவு காண தூண்டி, பல நாட்கள் உடன் இருந்த 
கண்ணீரினை அவ்வபோது மட்டுமே சந்திக்கக்கும் பகைவன்,
பாலூட்டி சீராட்டி வளர்த்த உள்ளங்களுக்கு தற்காலிக எதிரி,

சிலரின் கண்ணீருக்கு காரணமாய் அமைந்தாலும் 
பலரின் புன்னகைக்கு காரணமாய் இருக்கும் 
காதல் அவர்களே, இன்  நன்னாளில் பலரின் 
உள்ளங்களில் பெருக்கெடுத்து, புண்பட்ட சில 
இதயங்களை வருடி கொடுத்து மேலும் மேலும் 
அன்பு பல்கி பெருக உம்மை தன்
துணை என தேர்ந்தெடுத்தவர்களை ஆசிர்வதியும்,

உண்மை காதல் இன்னதென எடுத்துரையும், 
காதலினால் காமமே தவிர காமத்திற்காக காதல் இல்லை 
என உரக்க சொல்லும், விட்டுகொடுப்பதில் நீ நிறைந்துள்ளாய் 
என நினைவூட்டும், நம்பிக்கையிலும் நேர்மையிலும் உன் 
உயிர் உள்ளது என்று ஒலி எழுப்பும், மதிப்பிலும், சம உரிமையிலும் 
நீ செழித்து வாழ்வாய் என இவ்வுலகம் மறவாமல் இருக்கட்டும். 

கொண்ட காதல் இறுதி வரை தழைக்கட்டும் 
சேந்து வாழும் இதயங்களுக்கும், பிரிந்து வாழ்ந்தாலும் 
காதல் மறவா உன்னத  இதயங்களுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Tuesday, December 11, 2012

ரஜினி spl .... ரசிகர்களுக்கு மட்டும்

உலகம் போற்றுதே உன்ன, 
ஜாதி மத பேதம் இல்லாம 
உலகம் போற்றுதே உன்ன, 
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனசுல இடம் பிடிக்க 
என்ன விந்தை செய்தாயோ?

நீ நடந்தா அதிருது, 
நீ கை அசைச்சா அலறுது ,
கோடான கோடி கண்கள் உன் 
பார்வை பட காத்து கிடக்கே
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனசுல இடம் பிடிக்க 
என்ன விந்தை செய்தாயோ?

பிறந்தோம் வளர்ந்தோம் செத்தோம்னு 
இல்லாம, தலைவா நீ,
வரலாறா உருவெடுத்து நிக்கியே 
இன்னும் பல வருஷம் உன் பேர 
நிலைநாட்ட பல உயிர்கள் காத்துகிடக்கே 
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனசுல இடம் பிடிக்க 
என்ன விந்தை செய்தாயோ?

பெத்தவன் பேச்சை கேட்காத ஒரு கூட்டம் 
உன் பேச்சை கேட்டு பின்னால வருதே 
குழந்தைக்கு பால் வாங்க காசு இல்லாதவன் கூட 
உனக்கு பால் அபிஷேகம் பண்ண மறக்கலையே 
தன்னை பெத்ததுக்கும் தான் பெத்ததுகும் 
மேல உன்னை வச்சிருக்க 
என்ன விந்தை செய்தாயோ?
இந்த மனுஷ பயலுக 
மனச ஆள எங்க படிச்சாயோ?

எட்டு எட்டா வாழ்கைய பிரிச்சி காட்டி 
பகுதறிவ ஊட்டின, இன்னும் பல படங்கள்ள 
பல நல்ல கருத்தகள வாரி வழங்குன ,
மேலும் மேலும் மக்களுக்கு நல்லது செய்யும்மய்யா 
உன் அனுபவத்துல மேலும் ஒரு வருஷம் கூடுதய்யா 
இந்த பிறந்த  நாளாள உன் அனுபவத்துல 
மேலும் ஒரு வருஷம் கூடுதய்யா
என்ன விந்தை செய்தாயோ?
நீ மார்த்தாண்டனா வாழ ஆசை படுற மக்கள் 
மனுஷ பயலுக கிடைக்க 
என்ன தவம் செய்தாயோ?

Saturday, November 17, 2012

அவள்...


நீண்ட நாட்களுக்கு முன்பு நான் கிறுக்கிய வரிகள் 

ரவு நேர குளிர் காற்று அவள்
மழையில் நனைந்த பூ மொட்டு அவள்
கோடையில் தோன்றிய கரு மேகம் அவள்
இமய மலையின் பணி பரப்பு அவள்
என் வாழ்வின் இனிய இசை அவள்
இசையின் ஏழு சுவரங்களும் அவள்
அழகின் அதிசியம் அவள்
பிரஹ்மனின் தவமும் அவள்

காதலின் அகராதி அவள்
அழகின் இருப்பிடம் அவள்
வெற்றியின் புகழிடம் அவள்
பாசத்தின் பிறப்பிடமும் அவள்
கவலைகளின் கல்லறை அவள்
மகிழ்ச்சியின் வழிகாட்டி அவள்

குழந்தையின் மழழை அவள்
தாயின் ஆரவணைப்பு அவள்
நட்பின் தோழமை அவள்
தந்தையின் கண்டிப்பு அவள்
துணைவியின் பாசம் அவள்
இறைவனின் கருணை அவள்

மாலை நேர சூரியன் அவள்
மார்கழி மாத பனித்துளி அவள்
கோடை கால மழை துளி அவள்
பௌர்ணமி நேர நிலவு அவள்
அறிவி ஓர சாரல் அவள்
கடல் அலைகளின் தாளம் அவள்
நீரோடையின் தெளிவு அவள்

மலர்களின் வாசம் அவள்
வண்டுகளின் நேசம் அவள்
தேன் துளியின் ருசி அவள்
மலை பிரதேஷத்தின் பசுமை அவள்
பட்டு பூச்சியின் மென்மை அவள்
வண்ணத்து பூச்சியின் வண்ணம் அவள்
பூமி தாயின் பொறுமை அவள்

என் கோவம் அவள்
என் சிரிப்பு அவள்
என் சுவாசம் அவள்
என் நேசம் அவள்
என் இதய துடிப்பு அவள்
என் அணுவும் அவள்
என் உயிரும் அவள்
எனது காதல் அவள்



Sunday, August 5, 2012

வாழ்நாள் உறவுகள்


புழுதி சாலைகளில் ஒன்றாய் சுற்றிய நாட்கள்,
பாதி  கட்டிய வீடுகளில் நிகழ்த்திய கண்ணாமூச்சி
ரோடோர  நாய்  குட்டிகளுக்கு  அடைக்கலம், 
ஒன்று  இரண்டு  ரூபாய்  வைத்து  விளையாடிய 
புதர்  அடர்ந்த  மைதான  cricket,
உச்சி  வெயிலினில் மிதி வண்டி பயணம் ,
சின்ன சின்னதாய் செய்த பொருட்காட்சி திருட்டு,
வார  இறுதி  business விளையாட்டுகளும், போட்டி  போட்டு 
விளையாடிய  video game bike raceகள் ,
கல்லூரி  நாட்களில்  செய்த  mass bunk ஐடியாகள் 
குட்டி சுவற்றினில் அமர்ந்து நிகழ்த்திய  
சைட்  அரங்கேற்றங்கள், கவலைகள் ஏதுமின்றி  
சுற்றி திரிந்த மாணவ பருவமும், இறுதி  
வரை ஒன்றாய் வருவதற்காக தேடி கொண்ட  
உறவுகளுமான  நண்பர்கள் .., 
தொழில்நுட்ப  வளர்ச்சி  இல்லாமல்  அன்று  
கழித்த  நாட்களின்  அற்புத  உணர்வு , இன்று  A.C அறைகளிலும் 
Facebook இலும்  , எபோதாவது நிகழும் அலைபேசி உரையாடல்களிலும் 
கிடைபதில்லை ... 

வாழ்நாள் உறவுகளான நண்பர்களே ,
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...





கோபம்


கருமேகங்கள்  சூழ்ந்த  இதமான  வானிலையில் 
திடிரென வந்து  செலும்  இடியினை  போல்
உன் நட்பு எனும் கரு மேகத்தினில், திடீர் 
இடியாய் வந்து செலும் உன் கோபம், சிறிதாய் 
வலி தந்தாலும், உன் கோபத்திற்கு பின் நீ பேசும் 
அந்த முதல் வார்த்தை முதல் துளி  
மழையினை போல் சுகம் தானடி
என் கார்மேக தேவதையே...